பாடசாலைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்! பொருட்கள் திருடப்பட்டதா?

சுவிட்சர்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளைகாரர்களால் மாணவர்களின் இரண்டு வகுப்புகள் வீணாகியுள்ளன.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள தொழிற்கல்வி பாடசாலைக்குள் இரவு நேரம் பார்த்து கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

சில கொள்ளையர்கள் பாடசாலையில் உள்ள பொருட்களை உடைத்துள்ளனர், மேலும், அந்த தொழிற்கல்வி பாடசாலைக்குள் மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகள் இருந்துள்ளன.

ஆனால் இவை எதுவும் கொள்ளையர்களின் கண்களில் படவில்லை, பாடசாலைக்குள் கொள்ளையர்கள் இருப்பதை உறுதி செய்துகொண்ட பொலிசார், அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

இரவு நேரத்தில் பாடசாலைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அடுத்த நாள் காலையில் பொலிசாரர் பிடிக்கப்பட்டனர், இதனால் மாணவர்களின் இரண்டு வகுப்புகள் வீணாகியுள்ளன.

இந்த பாடசாலை மிகவும் பரபரப்பான பாடசாலை என்பதால், கொள்ளையர்கள் அதிக சேதத்தினை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

சுவிஸ் அகதிகள் முகாமில் கலவரம் ! நான்கு பேர் வைத்திய சலையில் அனுமதி

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் ஏற்பட்ட திடீர் தகராறில் 4 வாலிபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Oerlikon என்ற பகுதியில் அகதிகள் முகாம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த அகதிகள் முகாமில் நேற்று இரவு 9.15 மணியளவில் திடீரென அகதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தில் 8 இளைஞர்கள் உள்ளிட்ட 11 நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து உடனடியாக சூரிச் நகர பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பொலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, 4 இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

4 வாலிபர்களையும் பொலிசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எஞ்சிய 7 பேரையும் பொலிசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு பிறகு சில நிபந்தனைகளின் பேரில் பொலிசார் விடுதலை செய்தனர்.

பொலிசாரின் விசாரணையில் அகதிகள் முகாமில் தகராறில் ஈடுப்பட்டவர்களில் 7 பேர் எரித்தியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 4 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அகதிகள் முகாமில் திடீரென தகராறு ஏற்பட்டதற்கான விரிவான காரணங்கள் தெரியவராத நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கைகளை 10 கோடிக்கு காப்பீடு செய்த சலூன் கடை தொழிலாளி!

சுவிட்சர்லாந்து நாட்டில் முடித்திருத்தும் சலூன் கடை வைத்துள்ள தொழிலாளி ஒருவர் தன்னுடைய கைகளை சுமார் 10 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Niederuzwil என்ற நகரில் Roberto Cianciarulo என்ற 28 வயதான வாலிபர் வசித்து வருகிறார்.

இவர் ஒரு முடித்திருத்தும் தொழிலாளி என்பதால், இதே நகரில் சொந்தமாக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

முடி திருத்தும் தொழிலில் வாலிபர் சிறந்தவராக விளங்கியதால், இப்பகுதியில் இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், சலூன் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ‘முடி திருத்தும் தொழிலை சிறப்பாக செய்கிறீர்கள். எந்த நேரத்திலும் கைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில், உங்களை போன்ற தொழிலாளிகளுக்கு கைகள் தான் முக்கியம். கைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் தொழிலை தொடர முடியாமல் போய்விடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாடிக்கையாளரின் கருத்தை கேட்ட பின்னர் வாலிபருக்கு பல யோசனைகள் எழுந்துள்ளன.

பிரபல கால்பந்து வீரர்கள், மொடல்கள் என பல பிரபலங்கள் தங்களுடைய உடல் உறுப்புக்களை காப்பீடு(Insurance) செய்திருப்பதை வாலிபர் பல செய்திகளில் படித்தது நினைவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து, உடனடியாக காப்பீடு நிறுவனத்தை தொடர்புக்கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு தற்போது தனது கைகளை 7,50,000 பிராங்கிற்கு(10,85,90,483 இலங்கை ரூபாய்) காப்பீடு செய்துள்ளார்.

ஏதாவது ஒரு சூழலில் இவரது கைகளில் காயம் ஏற்பட்டு அல்லது நோய் காரணமாக முடி திருத்தும் தொழிலை செய்ய முடியாமல் போனால், காப்பீடு நிறுவனம் மூலமாக வாலிபருக்கு 7,50,000 பிராங்க் தொகை வழங்கப்படும்.

சுவிட்சர்லாந்து நாட்டு வரலாற்றிலேயே ஒரு முடித்திருத்தும் தொழிலாளி தனது கைகளை காப்பீடு செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையனை மடக்கிப் பிடித்த நாய்

சுவிட்சர்லாந்து நாட்டில் கொள்ளையை தடுக்க வந்த பொலிசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை பொலிஸ் நாய் விரட்டி சென்று மடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேர்ன் நகரில் உள்ள Pappelweg என்ற பகுதியில் இருந்து பொலிசாருக்கு அவசர தகவல் வந்துள்ளது.

தங்களது குடியிருப்பிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் கொள்ளையன் ஒருவன் நுழைந்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

தகவலை பெற்ற பொலிசார் இரண்டரை வயதான ஜேர்மன் ஷெபார்ட் வகை பொலிஸ் நாயுடன் விரைந்து சென்றுள்ளனர்.

கொள்ளை நடந்த வீட்டை அடைந்தவுடன், பொலிசாரை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்ப ஓட முயன்றுள்ளான்.

ஆனால், பொலிசார் ஒருவர் கொள்ளையனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் பொலிசாரை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான்.

இதனை தூரத்தில் இருந்து பார்த்த அந்த பொலிசார் நாய் பாய்ந்து சென்று கொள்ளையனை தடுத்து அவனை மேலும் நகர விடமால் மடக்கியுள்ளது.

அச்சத்தில் உறைந்த கொள்ளையன் ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியமால் திணறியுள்ளான். பின்னால் வந்த பொலிசார் அந்த கொள்ளையனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று தகவல் வெளியிட்ட பொலிசார், ‘கொள்ளையனை பிடிக்க பொலிஸ் நாய் பெரிதும் உதவி செய்துள்ளது. தற்போது பொலிசாரின் பிடியில் உள்ள 39 வயதான அந்த கொள்ளையன் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் விருப்ப ஓய்வு

சுவிசில் உள்ள Procter & Gamble தயாரிப்பு நிறுவனம் நூற்றிற்க்கும் மேற்பட்டோரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது.

உலகளவில் பலவிதமான வீட்டு உபயோக பொருட்களை விநியோகம் செய்யும் பிரபல தயாரிப்பு நிறுவனமான Procter & Gamble(P&G), கடந்த 1837ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த William Procter மற்றும் ஐயர்லாந்தை சேர்ந்த James Gamble என்ற இருவரின் கூட்டமைப்பினால் தொடங்கப்பட்டது.

தற்போது 80 நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் P&G 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் நுகர்வோரிடம் நம்பகமான பிராண்டு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என பெயர் பெற்றுள்ளது.

மேலும் அமெரிக்காவின் cincinnati ohio என்ற பகுதியில் தலைமையகத்தை கொண்ட இந்நிறுவனம் ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சுவிசின் ஜெனிவாவில் இருக்கும் P&G கடந்த 1956ம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், கடந்தாண்டு சுவிசின் 50 நிறுவனங்களில் தலைசிறந்த நிறுவனம் என்று முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தற்போது இந்நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும் அபாயத்தில் இருப்பதால், 100க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு என்ற பெயரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு 12,000 பிராங்குகள், உடல்நல காப்பீடு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு வருட பள்ளி கட்டணம் போன்ற சலுகைகள் அளித்து P&G நிறுவனம் உதவியுள்ளது.

பிரான்சை தாக்கிய புயல்! வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள், பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின

பிரான்சில் மிக கடுமையான புயல் காற்று வீசியதால், பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நேற்று மாலை முதல் கடுமையான புயல் காற்று வீசி வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், 55,000 வீடுகள் இருளில் மூழ்கின.
குறிப்பாக Morlaix என்ற நகரம் வெள்ளத்தால் சூழ்ந்தது.இக்கடும் புயலின் தாக்கத்தால் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் பாரிஸ், Basse Normandie, Haute Normandie, Ile France போன்ற முக்கிய பகுதிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பாரிஸில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல் தாக்கம் பதிவானபோதும், விமான போக்குவரத்து எவ்வித தடையும் இன்றி செயல்பட்டது.

இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், வரலாறு காணாத புயல் என கூறமுடியாது என்றாலும் இதன் தாக்கம் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

1
2
3
4

சுவிஸ்சிலாந்தில் இடம்பெறும் இன்றை ய பொதுஜன வாக்கெடுப்பு வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை தடுக்குமா?

பெருந்திரளான வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தைத் தடுக்கும் எண்ணத்தில் சுவிஸ் நாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை மக்கள் கருத்தை அறியும் பொது ஜன வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பெருந்திரளான குடியேற்றம் சுவிஸ் நாட்டை சிதைக்குமெனும் எண்ண ஓட்டத்தை, அந்நாட்டின் பழமைவாத வலது சாரி மக்கள் கட்சி முன்வைத்து வாக்குகளைத் திரட்ட முயல்கிறது. சுவிஸ் மண்ணை சிதைந்து வளர்ந்த அப்பில் மரமொன்றில் வெறும் பெருமை பேசும் பழங்கள் தொங்குவதாப் படங்களோடு விளம்பரங்கள் பல பொது இடங்களிற் தென்படுகின்றன.

சுவிஸின் வளர்ச்சிக்கு முன் அந்நாடு சிதையும் சாத்தியக்கூறு, குடியேற்ற அரசியலால் அதிகமாகவுள்ளதென அறிவுறுத்தல்கள் பல எழுகின்றன. 1970 ஆம் ஆண்டிற்குப்பின் சுவிஸ் நாட்டின் ஜனத்தொகை மிகவேகமாக வளர்ந்துள்ளதெனவும், 23 சதவீதத்தினர் வெளிநாட்டவர்களென்றும் அறிக்கைகள் வெளியாகின்றன.

பல இடங்களில் சுவிஸ் நாட்டின் பாரம்பரிய மொழிகளுக்குப் பதில் வெளிநாட்டு மொழிகள் உரக்க உச்சரிக்கப் படுகிறதென மக்கள் கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. திரளான வெளிநாட்டவர்களின் குடியேற்றம் சுவிஸ் பொருளாதாரத்தை மட்டுமல்லாது அதன் கலாச்சாரத்திலும் அடையாளத்திலும் பாதிப்பை கொணருமென மக்கள் கருதுகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் வீட்டு வாடகையினது கட்டுக்கடங்காத ஏற்றமும் வெளிநாட்டவரின் திரளான குடியேற்றத்தின் விளைவுகள் என்றும், சுவிஸ் வங்கி ரகசியங்கள் வெளியாக்கப் பட்டமைக்கும் வியாபார வரி ஏற்றம் பெற்றமைக்கும் ஜரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் காரணமெனவும் மக்கள் நம்புகின்றனர்.

சுவிஸின் கவர்ச்சியான ஊதியத்தால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் லாபமடைவதாகவும் நாடு எவ்வகையிலும் முன்னேறவில்லை மாறாக சீரழிவுகளை சந்திப்பதாகவும் சுவிஸ் மக்கள் திடமாக் கூறுகின்றனர்.

ஜரோப்பிய ஒன்றியத்தோடு நெருங்கிய ஒப்பந்தத்தை சுவிஸ் நாடு கொண்டிராத போதிலும், இரு பகுதியினருக்குமுரிய ஒரு சில முக்கிய பொது உடன்பாடுகள் காணப்படுகின்றது பொது ஜன வாக்கெடுப்பில் மக்கள் கட்சி வெற்றி பெறின் சுவிஸ் நாடு முழுமையாக ஜரோப்பிய ஒன்றியத்திடமிருந்து விலக நேரிடும்.

ஜரோப்பியர் சுவிஸில் வேலை வாய்ப்புகள் பெற்று அங்கு வாழலாம் எனும் ஒழுங்கமைப்பில் மாற்றங்கள் நிகழும். ஏற்கனவே ஜரோப்பியக் கொள்கைகளோடு முரண் பட்டுக்கொள்ளும் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாட்டு அரசியலில் இது வலுவைச் சேர்க்கும்.

பின் ஜரோப்பா முழுதும் இந்த மாற்றுக்கொள்கை பரவும். மக்களின் பெரும்பான்மை வாக்குகள் மட்டுமல்லாது சுவிஸின் சிறிய மாநிலங்களின் பெரும்பான்மையும் (Kanton) இந்த வாக்கெடுப்பின் முடிவை சேர்ந்தே நிர்ணயிக்கும் என்பது அந்நாட்டு முறைமையாகும்.எதிலும் அளவுக்கு மிஞ்சிய அதிகரிப்பு அழிவிற்கு வழி சமைக்கும்

சுவிட்சர்லாந்தில் காணாமல்போன மனநலம் குன்றிய பெண் மரணம்

சுவிட்சர்லாந்தில் காணாமல்போன மனநலம் குன்றிய பெண்ணின் மரணம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

2013ம் ஆண் நவம்பர் 12ம் திகதி EMILIE FORTUZI என்ற 15 வயதுப் பெண் மனநலம் குன்றியவர்களின் காப்பகத்தில் இருந்து காணாமல்போய்விட்டார்.

இந்நிலையில் இப்பெண்ணின் சடலம் SCHIFFENEN ஏரி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பிப்ரவரி 4ம் திகதி முதல் காணாமல்போன JOLE PERDIX என்ற 20 வயதுடைய இளைஞனையும் காணவில்லை என்ற அறிவிப்பின்படி தேடி வருகின்றனர்.

இந்த இளைஞனும் மனநலம் குன்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகா இல்லையே என்ற கவலையா? உங்களை ஆச்சரியப்படுத்தும் ஆய்வு முடிவுகள்

அழகா இல்லையே என கவலைப்பட்டு கொண்டிருக்கும் நபர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஜேர்மனி நாட்டின் ஜெனா பல்கலைகழகத்தை சேர்ந்த மனநல ஆய்வாளர்கள் ஹோல்ஜர் வீஸ், கரோலின் ஆல்ட்மேன் மற்றும் ஸ்டெபான் ஸ்க்வெய்ன்பெர்ஜர் ஆகியோர் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் அழகான முகங்களை கொண்டவர்களை விட அழகற்ற முகங்களை கொண்டவர்களே அதிகளவில் நினைவில் இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதி பேர் வசீகர முகத்துடனும், மீதமுள்ள பாதி பேர் வசீகரம் குறைந்த முகத்துடனும் இருந்தனர்.

எனினும், அனைவரும் தாங்கள் தனித்துவமான தோற்றத்தை கொண்டவர்கள் என்று கருதினர்.அழகான நபர்களைவிட அழகற்ற முகம் கொண்டவர்களின் புகைப்படங்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டன.

எனினும், ஏஞ்சலினா ஜோலீ போன்ற தனித்தன்மை வாய்ந்த முக அமைப்பை கொண்டவர்களை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மேலும் உணர்வு ரீதியிலான பாதிப்பு காரணமாக, அழகான முகத்தை கொண்டவர்களை நினைவில் வைப்பதற்கு கடினமாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கு ஆதாரமாக விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் பயன்படுத்திய ஈ.ஈ.ஜி பதிவுகள் அதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதில் மூளையின் மின் செயல்பாடுகள் அதற்கேற்ப செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எஸ்செக்ஸ் பல்கலைகழத்தின் சமூக மற்றும் பொருளாதார ஆய்வு அமைப்பின் ஆராய்ச்சியாளரான கண்டி நைஸ் கூறுகையில், நல்ல தோற்றம் கொண்டவர்கள் தங்கள் அழகினால் ஆதாயம் பெறுகின்றனர்.

முக வசீகரம் ஆனது ஒருவரது தொழிலில் அவரது கவுரவம் குறித்த தீர்மானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.