நூற்றுக்கணக்கானோர் விருப்ப ஓய்வு

சுவிசில் உள்ள Procter & Gamble தயாரிப்பு நிறுவனம் நூற்றிற்க்கும் மேற்பட்டோரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது.

உலகளவில் பலவிதமான வீட்டு உபயோக பொருட்களை விநியோகம் செய்யும் பிரபல தயாரிப்பு நிறுவனமான Procter & Gamble(P&G), கடந்த 1837ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த William Procter மற்றும் ஐயர்லாந்தை சேர்ந்த James Gamble என்ற இருவரின் கூட்டமைப்பினால் தொடங்கப்பட்டது.

தற்போது 80 நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் P&G 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் நுகர்வோரிடம் நம்பகமான பிராண்டு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என பெயர் பெற்றுள்ளது.

மேலும் அமெரிக்காவின் cincinnati ohio என்ற பகுதியில் தலைமையகத்தை கொண்ட இந்நிறுவனம் ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சுவிசின் ஜெனிவாவில் இருக்கும் P&G கடந்த 1956ம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், கடந்தாண்டு சுவிசின் 50 நிறுவனங்களில் தலைசிறந்த நிறுவனம் என்று முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தற்போது இந்நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும் அபாயத்தில் இருப்பதால், 100க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு என்ற பெயரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு 12,000 பிராங்குகள், உடல்நல காப்பீடு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு வருட பள்ளி கட்டணம் போன்ற சலுகைகள் அளித்து P&G நிறுவனம் உதவியுள்ளது.