சுவிஸ் அகதிகள் முகாமில் கலவரம் ! நான்கு பேர் வைத்திய சலையில் அனுமதி

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் ஏற்பட்ட திடீர் தகராறில் 4 வாலிபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Oerlikon என்ற பகுதியில் அகதிகள் முகாம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த அகதிகள் முகாமில் நேற்று இரவு 9.15 மணியளவில் திடீரென அகதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தில் 8 இளைஞர்கள் உள்ளிட்ட 11 நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து உடனடியாக சூரிச் நகர பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பொலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, 4 இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

4 வாலிபர்களையும் பொலிசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எஞ்சிய 7 பேரையும் பொலிசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு பிறகு சில நிபந்தனைகளின் பேரில் பொலிசார் விடுதலை செய்தனர்.

பொலிசாரின் விசாரணையில் அகதிகள் முகாமில் தகராறில் ஈடுப்பட்டவர்களில் 7 பேர் எரித்தியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 4 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அகதிகள் முகாமில் திடீரென தகராறு ஏற்பட்டதற்கான விரிவான காரணங்கள் தெரியவராத நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.