சுவிஸ்சிலாந்தில் இடம்பெறும் இன்றை ய பொதுஜன வாக்கெடுப்பு வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை தடுக்குமா?

பெருந்திரளான வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தைத் தடுக்கும் எண்ணத்தில் சுவிஸ் நாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை மக்கள் கருத்தை அறியும் பொது ஜன வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பெருந்திரளான குடியேற்றம் சுவிஸ் நாட்டை சிதைக்குமெனும் எண்ண ஓட்டத்தை, அந்நாட்டின் பழமைவாத வலது சாரி மக்கள் கட்சி முன்வைத்து வாக்குகளைத் திரட்ட முயல்கிறது. சுவிஸ் மண்ணை சிதைந்து வளர்ந்த அப்பில் மரமொன்றில் வெறும் பெருமை பேசும் பழங்கள் தொங்குவதாப் படங்களோடு விளம்பரங்கள் பல பொது இடங்களிற் தென்படுகின்றன.

சுவிஸின் வளர்ச்சிக்கு முன் அந்நாடு சிதையும் சாத்தியக்கூறு, குடியேற்ற அரசியலால் அதிகமாகவுள்ளதென அறிவுறுத்தல்கள் பல எழுகின்றன. 1970 ஆம் ஆண்டிற்குப்பின் சுவிஸ் நாட்டின் ஜனத்தொகை மிகவேகமாக வளர்ந்துள்ளதெனவும், 23 சதவீதத்தினர் வெளிநாட்டவர்களென்றும் அறிக்கைகள் வெளியாகின்றன.

பல இடங்களில் சுவிஸ் நாட்டின் பாரம்பரிய மொழிகளுக்குப் பதில் வெளிநாட்டு மொழிகள் உரக்க உச்சரிக்கப் படுகிறதென மக்கள் கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. திரளான வெளிநாட்டவர்களின் குடியேற்றம் சுவிஸ் பொருளாதாரத்தை மட்டுமல்லாது அதன் கலாச்சாரத்திலும் அடையாளத்திலும் பாதிப்பை கொணருமென மக்கள் கருதுகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் வீட்டு வாடகையினது கட்டுக்கடங்காத ஏற்றமும் வெளிநாட்டவரின் திரளான குடியேற்றத்தின் விளைவுகள் என்றும், சுவிஸ் வங்கி ரகசியங்கள் வெளியாக்கப் பட்டமைக்கும் வியாபார வரி ஏற்றம் பெற்றமைக்கும் ஜரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் காரணமெனவும் மக்கள் நம்புகின்றனர்.

சுவிஸின் கவர்ச்சியான ஊதியத்தால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் லாபமடைவதாகவும் நாடு எவ்வகையிலும் முன்னேறவில்லை மாறாக சீரழிவுகளை சந்திப்பதாகவும் சுவிஸ் மக்கள் திடமாக் கூறுகின்றனர்.

ஜரோப்பிய ஒன்றியத்தோடு நெருங்கிய ஒப்பந்தத்தை சுவிஸ் நாடு கொண்டிராத போதிலும், இரு பகுதியினருக்குமுரிய ஒரு சில முக்கிய பொது உடன்பாடுகள் காணப்படுகின்றது பொது ஜன வாக்கெடுப்பில் மக்கள் கட்சி வெற்றி பெறின் சுவிஸ் நாடு முழுமையாக ஜரோப்பிய ஒன்றியத்திடமிருந்து விலக நேரிடும்.

ஜரோப்பியர் சுவிஸில் வேலை வாய்ப்புகள் பெற்று அங்கு வாழலாம் எனும் ஒழுங்கமைப்பில் மாற்றங்கள் நிகழும். ஏற்கனவே ஜரோப்பியக் கொள்கைகளோடு முரண் பட்டுக்கொள்ளும் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாட்டு அரசியலில் இது வலுவைச் சேர்க்கும்.

பின் ஜரோப்பா முழுதும் இந்த மாற்றுக்கொள்கை பரவும். மக்களின் பெரும்பான்மை வாக்குகள் மட்டுமல்லாது சுவிஸின் சிறிய மாநிலங்களின் பெரும்பான்மையும் (Kanton) இந்த வாக்கெடுப்பின் முடிவை சேர்ந்தே நிர்ணயிக்கும் என்பது அந்நாட்டு முறைமையாகும்.எதிலும் அளவுக்கு மிஞ்சிய அதிகரிப்பு அழிவிற்கு வழி சமைக்கும்